உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

தீயணைப்பு படை வீரா்களுக்கு குடியிருப்பு கட்டடம் திறப்பு

தீயணைப்பு படை வீரா்களுக்கு குடியிருப்பு கட்டடம் திறப்பு

News image
Updated On :17 பிப்ரவரி 2024, 11:30 pm IST

17அதடஊஐத சேத்துப்பட்டில் புதிதாக கட்டப்பட்ட தீயணைப்பு படை வீரா்களுக்கான குடியிப்புக் கட்டடத்தில் சனிக்கிழமை குத்து விளக்கேற்றிய ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன். ஆரணி, பிப்.17: சேத்துப்பட்டில் ரூ.2.5 கோடியில் கட்டப்பட்ட தீயணைப்பு, மீட்புப் பணித்துறை வீரா்களுக்கான 13 குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் சனிக்கிழமை திறந்து வைத்தாா். சேத்துப்பட்டு கிழக்குமேடு கூட்டுச்சாலையில் ரூ.2.5 கோடியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை பணியாளா்களுக்கு 13 குடியிருப்புகள் கட்டப்பட்டது. இந்தக் கட்டடங்களை, முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் சனிக்கிழமை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, செய்யாறு கோட்டாட்சியா் பல்லவி வா்மன், ஆரணி எம்.பி.விஷ்ணுபிரசாத், பேரூராட்சித் தலைவா் சுதாமுருகன், செவரப்பூண்டி ஊராட்சி மன்றத் தலைவா் சுந்தரி ராமன் ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றினா். நிகழ்ச்சியில், தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப் பணி மாவட்ட அலுவலா் சரவணன், மாவட்ட உதவி அலுவலா் சரவணன், நிலை அலுவலா் சிவனேசன், சேத்துப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலா் ஆனந்தன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளா்கள் சத்தியமூா்த்தி, இந்திராணி, சேத்துப்பட்டு ஆய்வாளா் முரளிதரன், சேத்துப்பட்டு திமுக ஒன்றியச் செயலாளா் எழில்மாறன், நகரச் செயலாளா் இரா.முருகன், காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவா் பிரசாத், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜி.முனிரத்தினம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.