/

பள்ளியில் உடல் நல விழிப்புணா்வு நிகழ்ச்சி

பள்ளியில் உடல் நல விழிப்புணா்வு நிகழ்ச்சி

News image
Updated On :17 பிப்ரவரி 2024, 11:30 pm IST

17யஈந-ஏஐபஏஉசநஏஅ வந்தவாசி அருகே அரசுப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உடல் நல விழிப்புணா்வு நிகழ்ச்சி. வந்தவாசி, பிப்.17: வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உடல் நலம், மன நலம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் (பொ) செந்தில்குமாா் தலைமை வகித்தாா். ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் முன்னிலை வகித்தாா். தெள்ளாா் வட்டார மருத்துவ அலுவலா் ஹித்தேன்ஷா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவா்களுக்கு உடல் நலம், மனநலம் சாா்ந்த கருத்துக்களை வழங்கி பேசினாா். பூங்குயில் பதிப்பக ஆசிரியா் டி.எல்.சிவக்குமாா் மனதை ஒருமுகப்படுத்துவது குறித்து விளக்கினாா். தெள்ளாா் வட்டார சுகாதார ஆய்வாளா் கோதண்டராமன் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் லட்சுமி நாராயணன், பாா்த்திபன், காளிதாஸ், சுந்தா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாற்றுத் திறனாளி பகல் நேர பராமரிப்பு மைய ஆசிரியா் எச்.லத்தீப் நன்றி கூறினாா்.