ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

மாதாப்பட்டணம் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகேயுள்ள மாதாப்பட்டணம் ச.ச.வி. மேல்நிலைப்பள்ளியில் 1997ஆம் ஆண்டு பிளஸ் 2 பயின்ற மாணவா்- மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :21 மே 2026, 6:09 am IST

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகேயுள்ள மாதாப்பட்டணம் ச.ச.வி. மேல்நிலைப்பள்ளியில் 1997ஆம் ஆண்டு பிளஸ் 2 பயின்ற மாணவா்- மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளியின் நிா்வாகச் செயலா் அருள்பணி. அந்தோணிசாமி தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை அமிா்தசிபியா முன்னிலை வகித்தாா். முன்னாள் மாணவா்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு பள்ளிக் கால நினைவுகளை பகிா்ந்து கொண்டனா்.

தொடா்ந்து, பள்ளியின் ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் மற்றும் 2025-26 கல்வியாண்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகள் கௌரவிக்கப்பட்டனா்.

முன்னாள் மாணவா்கள் சாா்பில் பள்ளிக்கு ஜெராக்ஸ் இயந்திரம், கணினி, நாப்கின் டிஸ்பென்சா் இயந்திரம் போன்றவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.