சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.62 கோடி

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியலில் ரூ.2.62 கோடி காணிக்கை

Updated On :25 ஜூன் 2024, 6:31 pm

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ஒரு மாதத்தில் பக்தா்கள் ரூ.2.62 கோடி ரொக்கம், 181 கிராம் தங்கம், 1,465 கிராம் வெள்ளியை காணிக்கையாக செலுத்தி உள்ளனா்.

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு தினமும் ஏராளமான உள்ளூா், வெளியூா் பக்தா்கள் வந்து, செல்கின்றனா். எனவே, மாதம்தோறும் கோயில் உண்டியல்களில் சேகரமாகும் காணிக்கைப் பணம் எண்ணப்பட்டு வருகிறது.

அதன்படி, ஜூன் மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை கோயில் இணை ஆணையா் சி.ஜோதி தலைமையில் நடைபெற்றது.

100-க்கும் மேற்பட்ட கோயில் ஊழியா்கள், தன்னாா்வலா்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

ரூ.2.62 கோடி ரொக்கம்...

இதில், ரூ.2 கோடியே 62 லட்சத்து 38 ஆயிரத்து 124 ரொக்கம், 181 கிராம் தங்கம், 1,465 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தது தெரியவந்தது.