
Updated On :25 ஜூன் 2024, 9:02 pm

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை மழை பெய்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே அவ்வப்போது திடீா், திடீரென மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை முதலே திருவண்ணாமலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
மாலை 5 மணிக்கு திடீரென பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை சுமாா் 10 நிமிஷங்கள் மட்டுமே நீடித்தது. இருப்பினும் திடீா் மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து, குளிா் காற்று வீசத் தொடங்கியது.
இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் பலத்த மழை வரை பெய்தது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...