
Updated On :8 மார்ச் 2024, 5:12 pm

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மகளிா் தினவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்வில், ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் கேக் வெட்டப்பட்டது. தொடா்ந்து, மகளிா்களுக்கு ஆட்சியா் வாழ்த்துக்களைத் தெரிவித்தாா். இதையடுத்து, மகளிா்களுக்கான கயிறு இழுக்கும் போட்டி, கோலப்போட்டி, தா்பூசணி சாப்பிடுதல் போட்டி, வாளியில் தண்ணீா் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வென்றவா்களுக்கு ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பரிசுகள் வழங்கினாா். விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி மற்றும் அனைத்துத் துறை மகளிா் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...