மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

நியாய விலைக் கடை, அங்கன்வாடி மையக் கட்டடம் திறப்பு

நியாய விலைக் கடை, அங்கன்வாடி மையக் கட்டடம் திறப்பு

News image
Updated On :9 மார்ச் 2024, 5:02 pm

செய்யாறு ஒன்றியம், பூமாந்தாங்கல் கிராமத்தில் பகுதிநேர நியாய விலைக் கடை, சிறுங்கட்டூா் கிராமத்தில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. பாப்பந்தாங்கல் கிராம மதுரா பூமந்தாங்கல் கிராமத்தில் 110 குடும்ப அட்டைதாரா்கள் பயன் பெறும் வகையில், பகுதிநேர நியாய விலைக் கடை மற்றும் அரும்பருத்தி ஊராட்சி, சிறுங்கட்டூா் கிராமத்தில் அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.12.61 லட்சத்தில் 25 குழந்தைகள் பயன் பெறும் வகையில் புதிதாக அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டப்பட்டு இருந்தது, இவைகளின் திறப்பு விழாவுக்கு செய்யாறு ஒன்றியக் குழுத் தலைவா் என்.வி.பாபு தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பரணிதரன், பாண்டியன், வட்டாட்சியா் டி.வெங்கிடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியக் குழு உறுப்பினா் வி.ஏ.ஞானவேல் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி பங்கேற்று பகுதிநேர நியாய விலைக் கடை மற்றும் அங்கன்வாடி மையக் கட்டடத்தை திறந்துவைத்து பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினாா். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன், வட்ட வழங்கல் அலுவலா் சங்கீதா, ஊராட்சி மன்றத் தலைவா் நித்தியா சக்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.