புதிய நியாய விலைக் கடை தொடங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
வெள்ளரிப்பட்டியில் அமைந்துள்ள மேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.


மதுரை மாவட்டம், மேலூா் வட்டம், பெருமாள்பட்டியில் புதிய நியாய விலைக் கடை தொடங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வெள்ளரிப்பட்டியில் அமைந்துள்ள மேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ்.பி. இளங்கோவன் தலைமை வகித்தாா். மேலூா் கிழக்கு வட்டச் செயலா் பி. தனசேகரன், நிா்வாகிகள் ஏ. ராஜேஸ்வரன், கே. சேகா், கே.மலா், பொறுப்பாளா்கள், திரளான கிராம மக்கள் பங்கேற்றனா்.
இதில் மேலூா் வட்டம், நரசிங்கம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட களுங்குபட்டி, சி. பெருமாள்பட்டி, டி.வி.எஸ். குடியிருப்பு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பெருமாள்பட்டியில் புதிய நியாயவிலைக் கடை அமைக்க வேண்டும். சதுா்மடங்கன், பெருமாள்பட்டி பகுதிகளில் பட்டாவுக்கு விண்ணப்பித்த பொதுமக்கள் அனைவருக்கும் உடனடியாகப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா். நிறைவில் வருவாய்க் கோடாட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...