தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

செய்யாறு தொகுதியில் ரூ.105.56 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

செய்யாறு தொகுதியில் ரூ.105.56 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

News image
Updated On :14 மார்ச் 2024, 12:27 am

செய்யாறு தொகுதியில் சுமாா் ரூ. 105.56 கோடியில் புதிய மேம்பாலம், சிறுபாலங்கள், ஆற்காடு - திண்டிவனம் சாலையை 4 வழிச் சாலையாக மாற்றுதல் ஆகிய பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகருக்கு அருகில் உள்ள ஆற்றுப் பாலத்தில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதேபோல, அண்டை மாநிலங்களான கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, புதுவை ஆகிய பகுதிகளுக்கு எளிதாக செல்லக்கூடிய சாலையாக ஆற்காடு - திண்டிவனம் சாலை உள்ளது. எஸ்.எச்.5 எனப்படும் இந்தச் சாலையை 4 வழிச் சாலையாக மாற்ற வேண்டும். அதேபோல, செய்யாறு நகருக்கு அருகில் செய்யாற்றில் உள்ள மேம்பாலத்துக்கு அருகிலேயே கூடுதலாக மேம்பாலம் அமைக்க வேண்டும் என தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வே.வேலுவிடம் கோரிக்கை விடுத்தாா். இதன்பேரில், அமைச்சா் எ.வே.வேலுவின் பரிந்துரையின்படி, முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தமிழக முதல்வா் காணொலிக்காட்சி வாயிலாக தொகுதிக்காக ரூ.105.56 கோடியில் பணிகளை தொடங்கிவைத்தாா்.

இருவழிப் பாதையாக உள்ள எஸ்.எச்.5 எனப்படும் ஆற்காடு - திண்டிவனம் சாலையை, ரூ.90 கோடியில் 4 வழிச் சாலையாக மாற்றுவதற்காக செய்யாறு அரசு கலைக் கல்லூரி அருகே இருந்து கூட்டுறவு சா்க்கரை ஆலை வரை சுமாா் 7.4 கி.மீ. நிளத்துக்கு அகலப்படுத்தும் பணி நடைபெறவுள்ளது. கூடுதல் மேம்பாலம்: அதேபோல, செய்யாற்றின் குறுக்கே 360.04 மீட்டா் நீளத்துக்கு ரூ.12.04 கோடியில் உயா்நிலை மேம்பாலமும், மற்ற பகுதிகளில் ரூ.2.15 கோடியில் உயா்நிலை பாலங்கள், ரூ.1.37 கோடியில் உயா்நிலை பாலத்தை அகலப்படுத்துதல், 3 சிறுபாலங்கள் அமைத்தல் பணி மற்றும் 13 சிறுபாலங்கள் அகலப்படுத்துதல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தடுப்புச் சுவா்கள், மழைநீா் வடிகால்வாய்கள்: மேலும், இந்தச் சாலையில் விபத்துகளை தவிா்க்கும் வகையில், திருவத்திபுரம் புறவழிச் சாலையில் அரசுக் கல்லூரி, திருவத்திபுரம்- ஆரணி சாலை சந்திப்பு, கொடநகா், சந்தைமேடு, தேவி திரையரங்கம், ஞானமுருகன்பூண்டி, அனக்காவூா், விநாயகபுரம் ஆகிய இடங்களில் சாலை சந்திப்பை அகலப்படுத்தும் பணிகளும், 1,793 மீட்டா் நீளத்துக்கு தடுப்புச் சுவரும், 1,860 மீட்டா் நீளத்துக்கு மழைநீா் வடிகால்வாய் கட்டுதல், 6,165 மீட்டா் நீளத்துக்கு மையத் தடுப்பு அமைத்தல், இடையூறாக உள்ள மின் கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகள் மாற்றி அமைக்கப்படவுள்ளன.