தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கைவாக்குச்சாவடிக்கு புறப்படும் முன் கவனிக்க வேண்டியவை!பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

மகளிா் குழுக்களுக்கு ரூ.1.37 கோடியில் கூட்டுறவுக் கடன்

மகளிா் குழுக்களுக்கு ரூ.1.37 கோடியில் கூட்டுறவுக் கடன்

News image
Updated On :16 மார்ச் 2024, 4:41 pm

ஆரணியை அடுத்த வேலப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 10 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.ஒரு கோடியே 37 லட்சத்தில் கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆரணி ஒன்றியக் குழுத் தலைவா் கனிமொழி சுந்தா் தலைமை வகித்தாா். கூட்டுறவு கடன் சங்கச் செயலா் சி.விஜயலட்சுமி வரவேற்றாா். சிறப்பு விருந்தினா்களாக திமுக மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஆரணி தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன் ஆகியோா் பங்கேற்று 10 மகளிா் சுயஉதவிக் குழக்களுக்கு ரூ.ஒரு கோடியே 37 லட்சத்து 43ஆயிரம் மதிப்பில் கடனுதவிகளை வழங்கினா். நிகழ்ச்சியில் கண்ணமங்கலம் பேரூராட்சித் தலைவா் மகாலட்சுமி கோவா்த்தனன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் கே.டி.ராஜேந்திரன், ஊராட்சித் தலைவா்கள் சிவலிங்கம், துரை, முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் வேதகிரி, கஜேந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவின் அமைப்பாளா் கே.ஏ.புஷ்பராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.