தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கைவாக்குச்சாவடிக்கு புறப்படும் முன் கவனிக்க வேண்டியவை!பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்

ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்

News image
Updated On :16 மார்ச் 2024, 4:42 pm

வந்தவாசியில் உள்ள ஸ்ரீரங்கநாயகி சமேத ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வரும் மாா்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பின்னா் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, துவஜஸ்தம்பம் என அழைக்கப்படும் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. கோயில் அா்ச்சகா்கள் பி.ரங்கநாதன், எஸ்.சதீஷ்குமாா் ஆகியோா் பூஜைகளை நடத்தினா். விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். முன்னதாக, வெள்ளிக்கிழமை இரவு ஸ்ரீசெல்வா் உற்சவம், மிருத்சங்கிரஹணம், அங்குராா்ப்பணம், வாஸ்துசாந்தி ஆகியவை நடைபெற்றன.