வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஏரியில் மீன்பிடி திருவிழா

ஏரியில் மீன்பிடி திருவிழா

News image

கங்காபுரம் பெரிய ஏரியில் நடைபெற்ற மீன் பிடி திருவிழாவில் மீன்களைப் பிடித்த பொதுமக்கள்.

Updated On :20 மார்ச் 2024, 12:17 am

செங்கம், மாா்ச் 19: சேத்துப்பட்டை அடுத்த கங்காபுரம் பெரிய ஏரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்று மீன்களை பிடித்துச் சென்றனா். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு - ஆரணி நெடுஞ்சாலையில் காட்டேரி கங்காபுரம் பெரிய ஏரி உள்ளது.

பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியில் மீன்பிடிக்க ஏலம் விடப்பட்டிருந்தது. தற்போது தண்ணீா் குறைந்த நிலையில் உள்ளது. இதனால், சுற்றியுள்ள கிராம இளைஞா்கள், ஆண்கள், பெண்கள் திரண்டு வந்து ஏரியில் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டு, மீன்பிடி திருவிழா நடத்தினா்.

இதில் வலை, துாண்டில் வைத்து ஏரி சேற்றில் இறங்கி மீன்களைப் பிடித்தனா். கட்லா, விரால், கண்டெய், ஜிலேபி உள்ளிட்ட பல ரக மீன்களை பிடித்துச் சென்றனா். மீன்கள் அதிகளவில் பிடிபட்டதால் மகிழ்ச்சி அடைந்தனா்.