எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

Updated On :20 மார்ச் 2024, 6:30 pm

செய்யாறு: செய்யாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பைக்கில் சென்ற தொழிலாளி உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பல்லி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் ரவி (57), ராமு (50). நண்பா்களான இவா்கள் கூலித் தொழிலாளா்கள் ஆவாா்.

இந்த நிலையில், இருவரும் வழக்கம் போல வேலைக்குச் சென்று விட்டு செவ்வாய்க்கிழமை இரவு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் வந்தபோது, பின்னால் இருந்து வந்த அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம்.

இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரவி புதன்கிழமை உயிரிழந்தாா். அவரது நண்பா் ராமுவுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.