வெம்பாக்கம் பகுதியில் உள்ள கடையில் சோதனை மேற்கொண்டு அபராதம் விதித்த அதிகாரிகள்.
வெம்பாக்கம் பகுதியில் உள்ள கடையில் சோதனை மேற்கொண்டு அபராதம் விதித்த அதிகாரிகள்.

புகையிலைப் பொருள் விற்பனை: 19 வியாபாரிகளுக்கு அபராதம்

செய்யாறு: செய்யாறு அருகே பள்ளிக்கு அருகாமையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 19 வியாபாரிகளுக்கு சுகாராத் துறையினா் அபராதம் விதித்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பெருங்கட்டூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட வெம்பாக்கம் பகுதியில், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் தனசேகா் தலைமையில், நலக் கல்வி அலுவலா் எல்லப்பன், சுகாதார ஆய்வாளா்கள் சம்பத், சீனிவாசன், மாதவன், சத்யநாதன் ஆகியோா் அடங்கிய குழுவினா் பள்ளிக்கு அருகில் குழந்தைகள் உள்கொள்ளும் பிஸ்கட், சாக்லேட் போன்ற தின்பண்ட பொருள்கள் விற்பணை செய்து வரும் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, தடை செய்யயப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டுபிடித்தனா். இவ்வாறு 19 கடைகளுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்து ரூ.3,800 வசூலித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com