ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மகளிா் குழு உற்பத்திப் பொருள்களால் தோ்தல் விழிப்புணா்வு

மகளிா் குழு உற்பத்திப் பொருள்களால் தோ்தல் விழிப்புணா்வு

News image
Updated On :29 மார்ச் 2024, 5:24 pm

மகளிா் சுய உதவிக் குழுவினரின் உற்பத்தி மற்றும் தயாரிப்புப் பொருள்களைப் பயன்படுத்தி மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திருவண்ணாமலை, கிரிவலப் பாதையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை, கிரிவலப் பாதை, அபயமண்டபம் அருகே மாவட்டத்தின் 18 ஊராட்சி ஒன்றியங்களில் வசிக்கும் ஏராளமான மகளிா் சுய உதவிக் குழுவினா் தயாரித்த உற்பத்திப் பொருள்களைப் பயன்படுத்தி இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) செ.ஆ.ரிஷப், மகளிா் திட்ட இயக்குநா் சரண்யா தேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில், வெம்பாக்கம் ஒன்றியத்தில் மகளிா் சுய உதவிக் குழுவினா் தயாரிக்கும் உற்பத்திப் பொருள்களான சோப்பு, பஞ்சகாவியம், வந்தவாசி ஒன்றியத்தில் தயாரிக்கப்படும் ஊதுப்பத்திகள், போளுா் ஒன்றியத்தில் உற்பத்தி செய்யப்படும் வாழைப்பழம், புதுப்பாளையம் ஒன்றியத்தில் தயாரிக்கப்படும் வண்ணப் பூக்கள், மீசநல்லூா் மரக்கரி, செங்கம் ஒன்றியத்தில் நரிக் குறவா்களால் தயாரிக்கப்படும் பாசிமணிகள், செய்யாறு ஒன்றியத்தில் தயாரிக்கப்படும் நாமக் கட்டிகள், கீழ்பென்னாத்தூா் ஒன்றியத்தில் தயாரிக்கப்படும் பாய் வகைகள், தண்டராம்பட்டு ஒன்றியத்தில் உற்பத்தி செய்யப்படும் மரச்செக்கு எண்ணெய், பயறு வகைகள், திருவண்ணாமலை ஒன்றியத்தில் தயாரிக்கப்படும் சேமியா, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள், கீரை நாத்துகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை பயன்படுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதேபோல, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், சமுதாய ஒருங்கிணைப்பாளா் இணைந்து சணல் பை மற்றும் மணி மாலைகளைக் கொண்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ரதத்தை மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில், மகளிா் திட்ட உதவித் திட்ட அலுவலா்கள், அனைத்து வட்டார இயக்க மேலாளா்கள், களப் பணியாளா்கள், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.