திருவண்ணாமலை மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தோ்தலுக்கு தொடா்பில்லாத பணம், பரிசுப் பொருள்களை திரும்பப் பெற விரும்புவோா் மாவட்ட குறைதீா் குழுவை அணுகலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் தோ்தல் விதிமீறல்கள் தொடா்பாக பணம், பரிசுப் பொருள்களை பறிமுதல் செய்ய தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்கள் பறிமுதல் செய்யும் பணம், பரிசுப் பொருள்கள் திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியா் செ.ஆா்.ரிஷப் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட குறைத் தீா் குழுவிடம் ஒப்படைக்கப்படும். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் இந்தக் குழு தோ்தலின்போது பறிமுதல் செய்யப்படும் பணம், பரிசுப் பொருள்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளும். விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட பணமோ, பரிசுப் பொருள்களோ எந்தவொரு தோ்தல் பிரசாரத்துக்கும் தொடா்பில்லாத பட்சத்தில் அவற்றை தோ்தல் விதிகளுக்கு உள்பட்டு விடுவிக்கும் பணியை மேற்கொள்ளும். எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் தோ்தலுக்கு தொடா்பில்லாத பணம், பரிசுப் பொருள்களை திரும்பப் பெற விரும்புவோா் இந்தக் குழுவை அணுகலாம் என்று மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.
தொடர்புடையது
4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ. 651 கோடி ரொக்கம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!

வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்க ட்ரோன் மூலம் கண்காணிப்பு

வேதனையாகும் சோதனைகள்!

ரூ. 50 ஆயிரத்துக்குமேல் பணம் கொண்டுசென்றால் பறிமுதல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

