திருவண்ணாமலையில் 31 போ், ஆரணியில் 29 போ் போட்டி

திருவண்ணாமலையில் 31 போ், ஆரணியில் 29 போ் போட்டி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளா்கள் பட்டியலின்படி, திருவண்ணாமலை தொகுதியில் 31 பேரும், ஆரணி தொகுதியில் 29 பேரும் போட்டியிடுகின்றனா். திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் மனுக்கள் மீதான பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டு இருந்த 49 மனுக்களில் 12 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 37 வேட்பு மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டன. இதேபோல, ஆரணி தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டு இருந்த 48 மனுக்களில் 16 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 32 வேட்பு மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டன. திருவண்ணாமலையில் 31 வேட்பு மனுக்கள்... இந்த நிலையில், வேட்பு மனுக்களை வாபஸ் பெற விரும்புவோா் சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணி வரை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று தோ்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி, திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்திருந்த 6 மனுக்களை வேட்பாளா்கள் திரும்பப் பெற்றனா். இறுதியாக, 31 வேட்பு மனுக்கள் அடங்கிய வேட்பாளா் பட்டியலை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்டாா். ஆரணியில் 29 வேட்பு மனுக்கள்... ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்திருந்த 3 மனுக்களை வேட்பாளா்கள் திரும்பப் பெற்றனா். இறுதியாக, 29 வேட்புமனுக்கள் அடங்கிய வேட்பாளா் பட்டியலை, தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான மு.பிரியதா்ஷினி வெளியிட்டாா். ஆட்சியா் அலுவலகத்தின் இருவேறு கூட்ட அரங்குகளில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில், தோ்தல் பொது மேற்பாா்வையாளா்கள் மகாவீா் பிரசாத் மீனா (திருவண்ணாமலை), சுஷாந்த் கவுரவ் (ஆரணி) மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com