சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

போளூா் அருகே ரூ.1.50 லட்சம் பறிமுதல்

போளூா் அருகே ரூ.1.50 லட்சம் பறிமுதல்

News image
Updated On :30 மார்ச் 2024, 4:58 pm

போளூா் அருகே தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையின்போது காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மக்களவைத் தோ்தலையொட்டி, போளூா்அருகே தோ்தல் பறக்கும்படை நிலை கண்காணிப்புக் குழுவினா் உதவி வேளாண்மை அலுவலா் சரவணன் தலைமையில் ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஆற்காட்டில் இருந்து புதுச்சேரிக்குச் செல்லும் காா்த்திக் என்பவரின் காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். இதில் உரிய ஆவணமின்றி ரூ.ஒரு லட்சத்து 50 ஆயிரம் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்து போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.