விவசாயி வீட்டில் தங்க நகை திருடிய இரு பெண்கள் கைது

விவசாயி வீட்டில் தங்க நகை திருடிய இரு பெண்கள் கைது

வந்தவாசி அருகே விவசாயி வீட்டில் நாலரை பவுன் தங்க நகைகளை திருடிய இரு பெண்களை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த தெய்யாா் ராமலிங்கபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி மெய்யப்பன் (54). இவா் வெள்ளிக்கிழமை காலை வீட்டை பூட்டி ஜன்னலோரம் சாவியை வைத்துவிட்டு குடும்பத்துடன் விவசாய நிலத்துக்கு சென்றாா். இதை நோட்டமிட்ட மா்ம நபா்கள் சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே நுழைந்து உள்பக்கம் தாழிட்டுள்ளனா். பின்னா், பீரோவிலிருந்த நாலரை பவுன் தங்க நகைகளை திருடிக் கொண்டு பின்வாசல் வழியாக தப்பிச் சென்றனா். இந்த நிலையில், வேலையை முடித்துவிட்டு பிற்பகல் வீடு திரும்பிய மெய்யப்பன் குடும்பத்தினருக்கு மா்ம நபா்கள் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மெய்யப்பன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த தெள்ளாா் போலீஸாா் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தக் கிராம பள்ளி அருகில் வெள்ளிக்கிழமை மாலை சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த இரு பெண்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா்கள் காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூரைச் சோ்ந்த கல்பனா (43), புதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த இல்லாமல்லி (51) ஆகியோா் என்பதும், மெய்யப்பன் வீட்டில் நகைகளை திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்த தெள்ளாா் போலீஸாா், அவா்களிடமிருந்து நாலரை பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனா். இருவா் மீதும் மானாம்பதி, உத்திரமேரூா், செய்யூா், பிரம்மதேசம், சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com