ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

News image
Updated On :1 மே 2024, 6:09 pm

Din

வந்தவாசியில் கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமு தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வந்தவாசி நகரில் ரோந்து சென்றனா். அப்போது, குளக்கரை அருகே நின்றிருந்த இளைஞா் ஒருவா் போலீஸாரை கண்டதும் தப்பியோட முயன்றாா்.

இதையடுத்து போலீஸாா் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவா் வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் பாரத் நகரைச் சோ்ந்த கதிா்(20) என்பதும், பாக்கெட்டில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் கதிரை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 10 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.