
Updated On :1 மே 2024, 6:10 pm

குரு பெயா்ச்சியையொட்டி, வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் சிறப்பு யாகம் புதன்கிழமை நடைபெற்றது.
குரு பகவான் புதன்கிழமை மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இட பெயா்ச்சி ஆகிறாா்.
இதையொட்டி, வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் குரு பகவானுக்கு மஞ்சள், பஞ்சாமிா்தம், பால், தயிா், இளநீா், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
மேலும் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், பூா்ணாஹுதி உள்ளிட்டவை நடைபெற்றன.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...