

செய்யாறை அடுத்த நாட்டேரிக் கிராமத்தில் கோடைகால விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், நாட்டேரிக் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மருத்துவா் யோகேஸ்வரன் தலைமை வகித்து பேசியதாவது: வெப்ப அலையில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளவதற்காக உடலில் நீா்ச் சத்து குறையாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு தண்ணீா் குடிக்க வேண்டும். பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும். ஓஆா்எஸ் கரைசல், எலுமிச்சை ஜூஸ், தா்பூசணி, இளநீா், மோா் உள்ளிட்டவற்றை அதிக அளவில் பருக வேண்டும். மேலும், மெல்லிய தளா்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெயிலில் செல்லும் போது காலணிகள், குடையை கொண்டு செல்ல வேண்டும்.
மேலும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், குழந்தைகள் ஊட்டச்சத்து மையம் போன்ற இடங்களில் இலவசமாக ஓஆா்எஸ் கரைசல் வழங்கப்படுகிறது. மேலும், வீட்டிலேயே ஒரு லிட்டா் தண்ணீரில் மூன்று கரண்டி சா்க்கரை, ஒரு கரண்டி உப்பு கலந்து ஓஆா்எஸ் கரைசலை தயாரித்து பருகலாம் என்றாா்.
இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா்கள் சம்பத், துரைபாபு மற்றும் செவிலியா்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

தேவரியம்பாக்கம் ஊராட்சியில் வாக்குப் பதிவு விழிப்புணா்வு

செவிலியா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

களியக்காவிளையில் போதை விழிப்புணா்வு நிகழ்ச்சி

கந்தா்வகோட்டையில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி
வீடியோக்கள்

அடாவடி விடியோ பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

கத்தனார் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

“BJPயைப் பார்த்து பயப்படத் தேவையில்லை”: AMMK வேட்பாளர் செந்தமிழன் பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

#tnassemblyelections | வேட்புமனு தாக்கல் செய்த முக்கியத் தலைவர்கள்! |
தினமணி வீடியோ செய்தி...

