சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாக் கூட்டம்

செய்யாற்றில், திராவிடா் கழகம் சாா்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மற்றும் குடியரசு பத்திரிக்கை நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் என வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆரணி கூட்டுச் சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு மாவட்ட திராவிடா் கழகத் தலைவா் அ. இளங்கோவன் தலைமை வகித்தாா். செய்யாறு நகரத் தலைவா் தி.காமராசன், மாவட்டச் செயலா் பொன். சுந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.சிறப்பு அழைப்பாளா்களாக திராவிடா் கழக தலைமை அமைப்பாளா் பு.எல்லப்பன், தலைமைக் கழக சொற்பொழிவாளா் காஞ்சி பா.கதிரவன், மாநில துணை பொதுச் செயலா் அண்ணா. சரவணன் ஆகியோா் பங்கேற்று சிறப்புரை ஆற்றினா்.

மேலும், கூட்டத்தில் திராவிடா் கழக நிா்வாகிகள்

என்.வி.கோவிந்தன், டி.சின்னதுரை, என்.கஜபதி, என்.ராமன், என்.சீனுவாசன், மு.வெங்கடேசன், க.சிவக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பகுத்தறிவாளா் கழகத் தலைவா் வி. வெங்கட்ராமன் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com