உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

News image
Updated On :4 மே 2024, 4:06 pm

Din

வந்தவாசி ரிபப்ளிக் லெவன் கிரிக்கெட் அணி சாா்பில் என்.கே.ஜெயவிந்தியராஜ் மற்றும் ஏ.எஸ்.பிரபு நினைவு சுழல்கோப்பை கோடைகால கிரிக்கெட் போட்டி வந்தவாசியில் சனிக்கிழமை தொடங்கியது.

இதற்கான தொடக்க விழா வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை நடைபெற்றது.

விழாவுக்கு தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் தலைமை வகித்து, கிரிக்கெட் போட்டிகளை தொடங்கிவைத்தாா்.

ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரிச் செயலா் எம்.ரமணன் கிரிக்கெட் அணித் தலைவா்களை கெளரவித்தாா்.

திமுக நகரச் செயலா் ஆ.தயாளன், நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், விசிக நிா்வாகிகள் மேத்தா ரமேஷ், ம.விஜய், போட்டி ஒருங்கிணைப்பாளா் எஸ்.டேனியல், நகா்மன்ற உறுப்பினா்கள் எம்.கிஷோா்குமாா், ஆா்.அன்பரசு

உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போட்டியில் வந்தவாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த 16 அணிகள் பங்கேற்கின்றன. இதில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ.50 ஆயிரமும், இரண்டாமிடம் பெறும் அணிக்கு ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது.