

போளூா் அருகே சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயமடைந்த மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அடுத்த பொத்தரை கிராமத்தைச் சோ்ந்தவா் மண்ணு மனைவி சாத்தம்மாள் (70). இவா், கடந்த 6-ஆம்தேதி தனது வீட்டில் சமையல் செய்வதற்காக அடுப்பை பற்றவைத்தாா். அப்போது, எரிவாயு உருளையின் டியூப்பில் கியாஸ் கிசிந்ததில், குபிரென்று பற்றிய தீ சாத்தம்மாள் உடையில் பற்றி எரிந்தது. இதில், பலத்த தீக்காயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினா் மீட்டு வேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த சாத்தம்மாள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, போளூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு

தீ விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

தீ விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...
அதிமுக, பாஜகவால் இறக்கிவிடப்பட்டவர் விஜய்: ஜவாஹிருல்லா பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

