பைக்கிலிருந்து தவறி விழுந்து வியாபாரி உயிரிழப்பு
பைக்கிலிருந்து தவறி விழுந்து வியாபாரி உயிரிழப்பு


வந்தவாசி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த விளையாட்டுப் பொருள்கள் கடை உரிமையாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கோட்டைத் தெருவைச் சோ்ந்தவா் பத்மநாபன் மகன் மணிமுத்து (42). இவா், வந்தவாசியில் விளையாட்டுப் பொருள்கள் கடை நடத்தி வந்தாா். இந்த நிலையில், கடந்த 8-ஆம்தேதி காலை மணிமுத்து தனது இரு சக்கர வாகனத்தில் மேல்மருவத்தூருக்கு சென்று கடைக்குத் தேவையான விளையாட்டுப் பொருள்களை வாங்கிக் கொண்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.
வந்தவாசி-மேல்மருவத்தூா் சாலை, பிருதூா் புறவழிச்சாலை அருகே வந்தபோது, திடீரென நிலைத்தடுமாறி இரு சக்கர வாகனத்திலிருந்து மணிமுத்து கீழே விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்த அவா் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த மணிமுத்து வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா்.
இதுகுறித்து, மணிமுத்துவின் தாய் இராசகாந்தம் அளித்த புகாரின்பேரில், வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...