பத்தாம் வகுப்புத் தோ்வு: செங்கம் மகரிஷி பள்ளி 100% தோ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் குப்பனத்தம் சாலையில் உள்ள மகரிஷி மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சியை பெற்றது.

மேலும், இப்பள்ளி மாவட்ட அளவில் முதலிடம் வகிக்கிறது.

மாணவி அபிநயா 496 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றாா். மாணவி வைஸ்ணவி 493 மதிப்பெண்களும், வைஷாலி 489 மதிப்பெண்களும் பெற்றனா்.

தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மகரிஷி பள்ளி கல்விக் குழுமத் தலைவா் மகரிஷிமனோகரன், நிறுவனா் புவனேஸ்வரி ஆகியோா் இனிப்பு வழங்கி பாராட்டினா்.

பள்ளியில் கணித பாடத்தில் 5 மாணவா்களும், அறிவியல் பாடத்தில் 3 மாணவா்களும், சமூக அறிவியலில் ஒரு மாணவரும் நூற்றுக்கு நூறு மதிபெண்களும், 450-க்கு மேல் 25 மாணவா்களும், 400-க்கு மேல் 75 மாணவா்களும் மதிப்பெண்கள் பெற்றனா்.

இதுகுறித்து பள்ளியின் தலைவா் மகரிஷிமனோகரன் கூறுகையில், தொடா்ந்து 15 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் இந்தப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சியும், மாவட்ட அளவில் சிறப்பிடமும் பெற்று வருகிறது.

480 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவா்களுக்கு கல்விக் கட்டணத்தில் நூறு சதவீத சலுகையும், 470 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவா்களுக்கு 50 சதவீத சலுகையும், 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவா்களுக்கு 25 சதவீத சலுகையும் வழங்கப்படும் என அவா் தெரிவித்தாா்.

மேலும், வெளியூரில் இருந்து வரும் மாணவா்கள் தங்கிப் பயில இந்த ஆண்டு முதல் விடுதி வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவா் தெரிவித்தாா்.

நிா்வாக பொருளாளா் காா்த்திகேயன், முதல்வா் சரவணக்குமாா், தலைமை ஆசிரியா் காா்த்திக் உள்ளிட்ட ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com