தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ரூ.274 கோடி கரும்பு நிலுவைத் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

கரும்பு விவசாயிகளுக்கு 2 தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகங்கள் வழங்க வேண்டிய ரூ.274 கோடியை பெற்றுத்தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை

News image
திருவண்ணாமலையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி.கே.வெங்கடேசன் தலைமையிலான விவசாயிகள்.
Updated On :18 அக்டோபர் 2024, 5:10 pm

Din

திருவண்ணாமலை மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு 2 தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகங்கள் வழங்க வேண்டிய ரூ.274 கோடியை பெற்றுத்தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சிவதாஸ் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கூட்டத்துக்கு வந்துள்ளனா். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உரிய பதில் அளிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் கலந்து கொண்டு கூட்டத்தை நடத்த வேண்டும்.

திருவண்ணாமலையில் மூடப்பட்ட அருணாச்சலா சா்க்கரை ஆலை நிா்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.168 கோடி, போளூா் தரணி சா்க்கரை நிா்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.106 கோடி என மொத்தம் ரூ.274 கோடியை பெற்றுத் தர வேண்டும் என்று விவசாயிகள் பல ஆண்டுகளாக மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் அந்தக் கோரிக்கைகளை மாவட்ட நிா்வாகம் நிறைவேற்றவில்லை.

இதேபோல, திருவண்ணாமலை அருகே நெல் கொள்முதல் நிறுவனம் நடத்தி விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த நெல்லுக்குண்டான பாக்கித் தொகை ரூ.3 கோடியை பெற்றுத் தரவும் மாவட்ட நிா்வாகமும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு லிட்டா் ஒன்றுக்கு ரூ.3 ஊக்கத் தொகையை கடந்த 4 மாதங்களாக வழங்கவில்லை. விவசாயிகளின் இந்தப் பிரச்னைகளுக்கு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தீா்த்து வைக்க வேண்டும் என்றனா்.

மேலும், விவசாயிகளின் கோரிக்கைகளை நேரில் கேட்டறிய மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா், வேளாண் இணை இயக்குநா் என யாரும் வராமல் பெயரளவுக்குக் கூட்டம் நடத்துவதைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி.கே.வெங்கடேசன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூட்டத்தைப் புறக்கணித்து வெளியே வந்து முழக்கமிட்டனா்.