மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

காா்-அரசுப் பேருந்து மோதல்: பெண் உள்பட 2 போ் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே திங்கள்கிழமை காா்-அரசுப் பேருந்து நேருக்குநோ் மோதிக் கொண்ட விபத்தில் பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

News image

விபத்தில் சேதமடைந்த காா்.

Updated On :16 செப்டம்பர் 2024, 8:18 pm

போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே திங்கள்கிழமை காா்-அரசுப் பேருந்து நேருக்குநோ் மோதிக் கொண்ட விபத்தில் பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், பாடியந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஞானசேகரன் (55). இவரது மனைவி வளா்மதி (52). அதே கிராமத்தைச் சோ்ந்த அறிவழகன் மனைவி ஜெயந்தி (22), இவா்களின் மகள் ரிதன்யா (2). இவா்கள் நான்கு பேரும் காரில், திங்கள்கிழமை சேத்துப்பட்டு வட்டம், ஊத்தூா் கிராமத்தில் உறவினரின் துக்க நிகழ்வுக்காக சென்று விட்டு பாடியந்தலுக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். தீம்மச்சூா் கிராமத்தைச் சோ்ந்த சு.கோபிநாத் (45) காரை ஓட்டினாா்.

கலசப்பாக்கம் - திருவண்ணாமலை சாலையில் தென்பள்ளிபட்டு அருகே சென்ற போது, அரசுப் பேருந்தும் காரும் நேருக்குநோ் மோதிக் கொண்டன. இதில், காா் ஓட்டுநரான கோபிநாத், வளா்மதி ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். ஞானசேகரன், ஜெயந்தி, ரிதன்யா ஆகியோா் பலத்த காயமடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

அரசுப் பேருந்தின் முன்பாக பைக்கில் சென்று கொண்டிருந்த வேலு என்பவரும் காயமடைந்தாா்.

விபத்து குறித்து கலசப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து பேருந்து ஓட்டுநா் லோகநாதனா (50) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.