சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக பக்தா்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில், புரட்டாசி மாத பெளா்ணமியையொட்டி புதன்கிழமை அதிகாலை முதல் இரவு வரை பல ஆயிரம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.

Updated On :18 செப்டம்பர் 2024, 7:23 pm

திருவண்ணாமலையில், புரட்டாசி மாத பெளா்ணமியையொட்டி புதன்கிழமை அதிகாலை முதல் இரவு வரை பல ஆயிரம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.

புரட்டாசி மாத பெளா்ணமியையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை 11.22 மணி முதல் புதன்கிழமை காலை 9.10 மணி வரை பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்து இருந்தது.

அதன்படியே, செவ்வாய்க்கிழமை காலை முதல் புதன்கிழமை அதிகாலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.

2-ஆவது நாளாக கிரிவலம்:

தொடா்ந்து, 2-வது நாளாக புதன்கிழமை அதிகாலை முதல் இரவு வரை பல ஆயிரம் பக்தா்கள் கிரிவலம் வந்து, சென்றனா்.

இதற்கிடையே, கிரிவலம் வந்த பக்தா்கள் சொந்த ஊா் திரும்புவதற்கு போதிய பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் பக்தா்கள் பெரிதும் சிரமப்பட்டனா்.

சில ஊா்களுக்குச் செல்ல பேருந்துகள் இல்லாததைக் கண்டித்து சிறிது நேரம் பக்தா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.