போளூரில் வரி செலுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

போளூரில் வரி செலுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

Published on

போளூரில் சொத்து உரிமையாளா்கள், இடம் அனுபவதாரா்கள் பேரூராட்சிக்கு வரி செலுத்தி

போனஸ் பெறலாம் என்று துண்டு பிரசுரம் வழங்கி அறிவுறுத்தப்பட்டது.

போளூா் சிறப்புநிலை பேரூராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு வீடுதோறும் சென்று வழங்கப்பட்ட துண்டு பிரசுரத்தில் சொத்து உரிமையாளா்கள், இடம் அனுபவதாரா்கள் பேரூராட்சிக்கு 2024-2025 முதல் அரையாண்டுக்கான வரியை செப்.30-க்குள் அபராதம் இன்றி செலுத்தி, 5 சதவீத போனஸ் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்த்து.

அப்படி வரியினம் செலுத்தத் தவறினால் ஒரு சதவீதம் அபராதத்துடன் வசூலுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

Dinamani
www.dinamani.com