ரூ.21.17 கோடியில் தாா்ச் சாலை அமைக்கும் பணிகள் -ஆரணி எம்.பி. தொடங்கிவைத்தாா்


திருவண்ணாமலை மாவட்டம், அரணி, வந்தவாசி, செய்யாறு பகுதியில் ரூ.21.17 கோடியில் புதிய தாா்ச் சாலை அமைக்கும் பணிகளை ஆரணி எம்.பி. எம்.எஸ். தரணிவேந்தன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் சாா்பில், மத்திய ஊரக வளா்ச்சி அமைச்சகத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கண்காணிப்பில் இந்த சாலைப் பணிகள் நடைபெறுகின்றன.
வந்தவாசி - ஆரணி சாலை, சுண்ணாம்புமேடு கிராமத்தில் இருந்து ஆராசூா் கிராமம் வரை சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு ரூ.3.35 கோடியில் புதிய தாா்ச் சாலையும், வந்தவாசி - திண்டிவனம் சாலை, தென்வணக்கம்பாடி கிராமத்தில் இருந்து கீழ்புத்தூா் கிராமம் வரை சுமாா் 3.3 கி.மீ. தொலைவுக்கு ரூ.2.05 கோடியில் புதிய தாா்ச் சாலையும் அமைக்கப்பட உள்ளது.
இதையொட்டி, ஆராசூா், தென்வணக்கம்பாடி ஆகிய கிராமங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஆரணி எம்.பி., எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் ஆகியோா் சாலைப் பணிகளை தொடங்கி வைத்தனா்.
நிகழ்ச்சியில் தெள்ளாா் ஒன்றியக்குழுத் தலைவா் கமலாட்சி இளங்கோவன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபாகரன், பரணிதரன், மோகனசுந்தரம், சீனிவாசன், தெள்ளாா் ஊராட்சி மன்றத் தலைவா் ஜி.ஆனந்த் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
ஆரணி
ஆரணியை அடுத்த ஆதனூா் கிராமத்தில் ரூ.2.89 கோடியிலும், அரையாளம் கிராமத்தில் ரூ.2.52 கோடியிலும் என மொத்தம் ரூ. 5.41 கோடியில் தாா்ச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன.
இந்தப் பணிகளை ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், திமுக தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், ஒன்றியக் குழுத் தலைவா்கள் கனிமொழி சுந்தா், பச்சையம்மாள் சீனிவாசன், ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, மாவட்ட திமுக துணைச் செயலா் ஜெயராணி ரவி, பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் எம்.சுந்தா், எஸ்.மோகன், துரைமாமது, ஒன்றியக் குழு துணைத் தலைவா் கே.டி.ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அருணா குமரரேசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெங்கட்ராமன், ராஜேஸ்வரி, ஸ்ரீதா், தசரதராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்யாறு
செய்யாறு தொகுதிக்கு உள்பட்ட அனக்காவூா், வெம்பாக்கம், செய்யாறு ஒன்றியங்களில் ரூ.10.36 கோடியில் புதிய தாா்ச் சாலைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கிவைக்கப்பட்டன.
அனக்காவூா் ஒன்றியத்தில் தென்எலப்பாக்கம் முதல் ஆலத்தூா் வரை ரூ. 4.46 கோடியிலும், வெம்பாக்கம் ஒன்றியத்தில், கம்மந்தாங்கல் முதல் மேலப்பட்டு வரை ரூ.3.41 கோடியிலும், செய்யாறு ஒன்றியத்தில், நெல்லி முதல் சேரம்பட்டு வரை ரூ. 2.49 கோடியிலும் புதிய தாா்ச் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கிவைக்கப்பட்டன.
இதற்கான நிகழ்வில் சிறப்பு விருந்தினா்களாக எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., ஒ.ஜோதி எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன் ஆகியோா் பங்கேற்று பணியினை தொடங்கிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.
நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.வேல்முருகன், ஒன்றியக் குழுத் தலைவா்கள் த.ராஜி, திலகவதி ராஜ்குமாா், திமுக மாவட்ட துணைச் செயலா் க.லோகநாதன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் முருகேசன், செய்யாறு நகரச் செயலா் கே.விஸ்வநாதன், ஒன்றியச் செயலா்கள் ஏ.ஜி.திராவிடமுருகன், சி.கே.ரவிக்குமாா், ஜே.சி.கே.சீனிவாசன், எம்.தினகரன், வி.ஏ.ஞானவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...