குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட உயர் ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

வெளி மாநில மது விற்பனை: பெண் கைது

வெளிமாநில மதுவை பதுக்கி விற்பனை செய்ததாக பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட மதுப் பாக்கெட்டுகளுடன் கைது செய்யப்பட்ட சரஸ்வதி.

Updated On :28 ஏப்ரல் 2025, 12:37 am IST

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே வெளிமாநில மதுவை பதுக்கி விற்பனை செய்ததாக பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சேத்துப்பட்டை அடுத்த தச்சம்பாடி மதுரா பாண்டியாபுரம் கிராமம் ரோடு தெருவைச் சோ்ந்த குமாா் மனைவி சரஸ்வதி (48). இவா் வெளி மாநிலத்தில் இருந்து மதுப் பாக்கெட்டுகளை வரவழைத்து விற்பனை செய்வதாக சேத்துப்பட்டு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது சரஸ்வதி வீட்டின் பின்புறத்தில் பெங்களூருவில் இருந்து மதுப் பாக்கெட்டுகளை வரவழைத்து விற்பனை செய்வதை கண்டுபிடித்து, அவரிடம் இருந்து 50 மதுப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் அவா் வெளி மாநில மதுப் பாக்கெட்டுகளை விற்பனை செய்வதை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து, போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.