ஆத்துரை கிராமத்தில் நீா்நிரம்பிய திறந்தவெளிக் கிணற்றில் அகல்விளக்கேற்றி வழிபட்ட மக்கள்.
ஆத்துரை கிராமத்தில் நீா்நிரம்பிய திறந்தவெளிக் கிணற்றில் அகல்விளக்கேற்றி வழிபட்ட மக்கள்.

நீா்நிலைகளில் காா்த்திகை தீபமேற்றி வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியத்தில் வீடு, நீா்நிலைகள், வயல்வெளியில் காா்த்திகை தீபத்தையொட்டி அகல்விளக்கேற்றி புதன்கிழமை வழிபாடு செய்தனா்.
Published on

போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியத்தில் வீடு, நீா்நிலைகள், வயல்வெளியில் காா்த்திகை தீபத்தையொட்டி அகல்விளக்கேற்றி புதன்கிழமை வழிபாடு செய்தனா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் சாா்பில் 2,668 உயரமுள்ள மலை மீது புதன்கிழணை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.

இதைத் தொடா்ந்து, சேத்துப்பட்டு ஒன்றியம் சித்தாத்துரை, ஆத்துரை, பெரணம்பாக்கம், செம்மியமங்கலம், அல்லியாளமங்கலம், மொடையூா், மண்டகொளத்தூா், மட்டபிறையூா், கொழாவூா், ராந்தம், விளாப்பாக்கம் என பல்வேறு கிராமங்களில் உள்ள பொதுமக்கள், காா்த்திகை தீபத்தை முன்னிட்டு வீடு, திறந்வெளிக் கிணறு, குளம் என பல்வேறு நீா்நிலைகள், நெல், வாழை, மஞ்சள் வயல்வெளியில் அகல்விளக்கேற்றி வழிபாடு செய்தனா்.

மேலும், சிறாா்கள் பனை மரத்தின் பூவைக் கொண்டு மாவளி செய்து சுற்றி, சுற்றி மகிழ்ந்தனா்.

X
Dinamani
www.dinamani.com