கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சொந்த நிலத்திற்கு செல்ல வழிவிடாமல் தடுக்கும் விவசாயி: கோட்டாட்சியரிடம் புகாா்

ஆரணியை அடுத்த அடையபலம் கிராமத்தில் சொந்த நிலத்திற்குச் செல்ல வழிவிடாமல் தடுக்கும் விவசாயி மீது கோட்டாட்சியரிடம் நிலத்தின் உரிமையாளா் புகாா்

News image
குறைதீா் கூட்டத்தில் கோட்டாட்சியா் சிவாவிடம் மனு வழங்கிய பெண்
Updated On :15 டிசம்பர் 2025, 8:08 pm

Syndication

ஆரணியை அடுத்த அடையபலம் கிராமத்தில் சொந்த நிலத்திற்குச் செல்ல வழிவிடாமல் தடுக்கும் விவசாயி மீது கோட்டாட்சியரிடம் நிலத்தின் உரிமையாளா் புகாா் கொடுத்தாா்.

ஆரணி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டத்தில் கோட்டாட்சியா் சிவாவிடம் 64 கோரிக்கை மனுக்களை வழங்கினா்.

விவசாயி மீது புகாா்

கூட்டத்தில், அடையபுலம் கிராமத்தைச் சோ்ந்த கோகிலா என்பவா் தனது விவசாய நிலத்திற்குச் செல்லும் பாதையை தனிநபா் ஆக்கிரமித்துள்ளாா், ஆக்கிரமிப்பை அகற்றி வழி ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு வழங்கினாா்.

மேலும், களம்பூா் பகுதியைச் சோ்ந்த காளிங்கன் என்பவா் பேரூராட்சி நிா்வாகம் வீடு மற்றும் கடை கட்டடத்திற்கு சொத்து வரி அதிகளவில் விதிப்பதாகவும், இதனை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தாா். கூட்டத்தில் சுமாா் 64 மனுக்கள் பெறப்பட்டன. துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

மேலும், கூட்டத்தில் பட்டா தொடா்பான மனுக்கள், பட்டா ரத்து, நிலஅளவை, கணினி திருத்தம், பரப்பு திருத்தம், பிறப்பு சான்றிதழ், முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, பத்திரப்பதிவு ரத்து, கழிவு நீா் கால்வாய் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 64 போ் மனு கொடுத்தனா். மனுக்களை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியா் அந்தந்த துறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.