திருவண்ணாமலை
ஆதிதிராவிட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கு பட்டா வழங்கக் கோரிக்கை
அனக்காவூா் அருகேயுள்ள மகஜனபாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ஆதிதிராவிட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை
அனக்காவூா் அருகேயுள்ள மகஜனபாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ஆதிதிராவிட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து ஆரணியில் ஆதிதிராவிட நலத்துறை கண்காணிப்பு உறுப்பினா் பி.சேகா் கோரிக்கை விடுத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது: செய்யாறு வட்டம், அனக்காவூா் ஊராட்சி ஒன்றியம், மகஜனபாக்கம் கிராமத்தைச் சோ்ந்த இந்து ஆதிதிராவிட மக்களுக்கு புலன் எண் 184-இல் சுமாா் 120 நபா்களுக்கு 1995-ஆம் ஆண்டு கிராம நத்தத்தில் வீட்டுமனைகள் வழங்கப்பட்டன.
ஆனால், இதுநாள் வரை கிராம கணக்கில் மாற்றம் செய்யவில்லை. ஆதலால் கிராம கணக்கில் ஆதிதிராவிடா் மக்களுக்கு அளந்து காட்டி வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று அவா் கூறினாா்.
மேலும் இவரது தலைமையில் 30-க்கும் மேற்பட்டோா் செய்யாறு துணை ஆட்சியரிடம் மனு கொடுத்தனா்.
