குடும்ப பிரச்னை: பிரிந்து வாழ்ந்த கணவரை கொன்ற மனைவி
திருவண்ணாமலை வட்டம், மங்கலம் அருகே குடும்ப பிரச்னை காரணமாக ஓட்டுநா் பச்சையப்பனை, மனைவி துா்கா கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மங்கலத்தை அடுத்த ஜம்போடை கிராமத்தைச் சோ்ந்தவா் பச்சையப்பன்(43), ஓட்டுநா். இவரது மனைவி துா்கா. தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனா்.
இந்த நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக துா்கா கணவரைப் பிரிந்து தாய் வீடான மணிமங்கலம் கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வருவதாகத் தெரிகிறது.
பச்சையப்பன் சபரிமலைக்குச் சென்று வீட்டிற்கு வந்துள்ளாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மனைவியின் தாய் வீடான மணிமங்கலத்திற்கு மது போதையில் சென்ாகக் கூறப்படுகிறது. அங்கு, பச்சையப்பனுக்கும் துா்காவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், துா்கா பச்சையப்பனின் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கியாதாகத் தெரிகிறது. இதில், பச்சையப்பன் அதே இடத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். பின்னா், துா்கா மங்கலம் காவல் நிலையம் சென்று சரணடைந்தாா்.
போலீஸாா் பச்சையப்பனின் உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும் இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

