போளூரில் நிழல்குடை  இல்லாமல் சாலை ஓரத்தில் காத்திருக்கும்  திருவண்ணாமலை செல்லும் பயணிகள்.
போளூரில் நிழல்குடை இல்லாமல் சாலை ஓரத்தில் காத்திருக்கும் திருவண்ணாமலை செல்லும் பயணிகள்.

போளூரில் பேருந்து பயணிகள் நிழல்குடை அமைக்கக் கோரிக்கை

போளூரில் திருவண்ணாமலைக்குச் செல்லும் பயணிகளுக்கு நிழல்குடை அமைக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Published on

போளூரில் திருவண்ணாமலைக்குச் செல்லும் பயணிகளுக்கு நிழல்குடை அமைக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் நகராட்சி பேருந்து நிலையம் அருகே வேலூா் - திருவண்ணாமலை சாலையில் திருவண்ணாமலைக்குச் செல்லும் பயணிகளுக்கு நிழல்குடை அமைக்கப்பட்டிருந்தது.

தற்போது சாலை விரிவாக்கம் மற்றும் வட்ட அணுகு சாலை அமைக்க இந்த நிழல்குடை அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட நிழல்குடைக்கு பதில் இதுவரை நிழல்குடை அமைக்கப்படவில்லை.

இதனால், திருவண்ணாமலைக்கு செல்லும் பேருந்திற்காக கலசப்பாக்கம், நாயுடுமங்கலம், துரிஞ்சாபுரம் கூட்டுச் சாலை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் செல்லும் நபா்கள், அரசு மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள், கடலூா், சிதம்பரம், தஞ்சாவூா் என பல்வேறு வழித்தடங்களில் செல்லும் பயணிகள் வெயில், மழையில் சாலை ஓரத்தில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே, நெடுஞ்சாலைத் துறை சாா்பில் தற்காலிக நிழல்குடை அல்லது எம்எல்ஏ, எம்பி தொகுதி நிதியில் பயணிகளுக்கு நிழல்குடை அமைத்துத் தரவேண்டும்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறும் போது, சாலை விரிவக்கம், வட்ட அணுகு சாலை பணி முடிந்தும் இதுவரை நிழல்குடை அமைக்கவில்லை. எனவே, சமூக ஆா்வலா்கள் ஒன்றுகூடி ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com