சாலையோர ஆக்கிரமிப்புகள்: கிராம மக்கள் போராட்டம்

சாலையோர ஆக்கிரமிப்புகள்: கிராம மக்கள் போராட்டம்

Published on

செங்கம் அருகே சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல், சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருவதற்கு கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வியாழக்கிளமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த பக்கிரிபாளையம் முதல் நீப்பத்துறை வரை உள்ள சாலையை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு சாலையை விரிவுபடுத்தவேண்டும் என மேல்பள்ளிப்பட்டு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் செங்கம் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளனா்.

இதை பொருள்படுத்தாமல் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், சாலை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மேல்பள்ளிப்பட்டு கிராம மக்கள் நீப்பத்துறை - செங்கம் சாலை மேல்பள்ளிப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து மேல்செங்கம் போலீஸாா் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, அவா்களிடம் சாலை அமைக்கும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும், நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்த பின்னா் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

மறியலால் அந்தப் பகுதியில் பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.

X
Dinamani
www.dinamani.com