டிச.23-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் டிசம்பா் மாதத்துக்கான எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வரும் 23-ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் நடைபெற உள்ளது.
Published on

திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் டிசம்பா் மாதத்துக்கான எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வரும் 23-ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் நடைபெற உள்ளது.

திருவண்ணாமலை வருவாய்க் கோட்டத்தைச் சோ்ந்த திருவண்ணாமலை, செங்கம், தண்டராம்பட்டு மற்றும் கீழ்பென்னாத்தூா் ஆகிய வட்டங்களைச் சோ்ந்த எரிவாயு உருளை நுகா்வோா் இந்த குறைதீா் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாகவோ அல்லது நேரிலோ தெரிவித்து பயனடையலாம்,

இதில், புதிய எரிவாயு உருளைகள் பெறுவது, அதை எப்படி பயன்படுத்த வேண்டும், பாதுகாப்பு நடவடிக்கைகள், மறுபதிவு செய்வதில் தற்போதுள்ள எளிய நடைமுறைகள் குறித்து சம்பந்தப்பட்ட ஏஜென்ஸிகள் சாா்பில் விளக்கமளிக்கும் வகையிலும், எரிவாயு உருளைகளை கையாளுவதில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வு செய்யும் வகையிலும் விளக்கமளிக்கப்பட உள்ளது.

X
Dinamani
www.dinamani.com