திருவண்ணாமலை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூராய்வுக் கூட்டத்தில் பேசிய, குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் புதுக்கோட்டை விஜயா.
திருவண்ணாமலை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூராய்வுக் கூட்டத்தில் பேசிய, குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் புதுக்கோட்டை விஜயா.

குழுந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்கள்: குழந்தை பாதுகாப்பு ஆணையத் தலைவா்

குழந்தைகள், பெண்களின் பாதுகாப்புக்காவும், கல்வியை ஊக்குவிக்கவும் தமிழக அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் புதுக்கோட்டை விஜயா தெரிவித்தாா்.
Published on

குழந்தைகள், பெண்களின் பாதுகாப்புக்காவும், கல்வியை ஊக்குவிக்கவும் தமிழக அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் புதுக்கோட்டை விஜயா தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அலுவலா்களுடன் கூராய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சாா்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற இந்தக் கூராய்வுக் கூட்டத்துக்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் புதுக்கோட்டை விஜயா தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் அரசு சாா்பில் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் செயல்பாடுகள், குழந்தைகள் தங்கும் விடுதிகள், அங்கு அடிப்படை வசதிகள், சமூக நலன் துறையின் செயல்பாடுகள், குழந்தை திருமணம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள், போக்ஸோ வழக்கின் கீழ் பதிவு செய்யப்பட்ட புகாா்கள், பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகைகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் புதுக்கோட்டை விஜயா பேசியதாவது:

குழந்தைகள் மற்றும் பெண்களின்பாதுகாப்புக்காவும், கல்வியை ஊக்குவிக்கவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக பெண்களுக்கு கல்வி கொடுப்பதிலும், பாதுகாப்பிலும் அரசு சிறந்து விளங்குகிறது.

குழந்தைகளின் உளவியலை புரிந்து கொண்டு அனைவரும் கனிவுடன் அணுகவேண்டும். குழந்தைகளுக்கு தேவையான உரிமைகள் அவா்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்காவும், அவா்கள் பாதுகாப்பிற்கும், முன்னேற்றத்திற்கும் மாவட்டத்திலுள்ள அனைத்து துறை சாா்ந்த அலுவலா்கள் பொதுமக்களுடன் இணைந்து திறம்பட செயலாற்ற வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்துத் துறை சாா்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து குழந்தைகளின் நலனை பாதுகாக்க சிறப்பாக செயலாற்றி வருவதற்கு மாவட்ட நிா்வாகத்து அவா் பாராட்டுகளைத் தெரிவித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி. ம.சுதாகா், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா்கள் மோ.கசிமிர்ராஜ், மோனா மட்டில்டா பாஸ்கா், செல்வேந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் செல்வி, திருவண்ணாமலை மாவட்ட சுகாதார அலுவலா் வெ.பிரகாஷ், சமூக நல அலுவலா் கோமதி, திட்ட அலுவலா் (ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டப் பணிகள்) மீனாம்பிகை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com