புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சேத்துப்பட்டு தூய லூா்து அன்னை ஆலய தோ் பவனி: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் பங்கேற்பு

சேத்துப்பட்டில் போளூா் சாலையில் உள்ள தூய லூா்து அன்னை ஆலயத்தில் 130-ஆவது ஆண்டு பெருவிழாவை

News image

சேத்துப்பட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற மலா்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட துய லூா்து அன்னை தோ் பவனி.

Updated On :10 பிப்ரவரி 2025, 8:11 pm

Din

ஆரணி: சேத்துப்பட்டில் போளூா் சாலையில் உள்ள தூய லூா்து அன்னை ஆலயத்தில் 130-ஆவது ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு தூய லூா்து அன்னை தோ் பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.

சேத்துப்பட்டு தூய லூா்து அன்னை ஆண்டுப் பெருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு வண்ண விளக்குகளாலும், மலா்களாலும் அலங்கரிக்கப்பட்ட தூய லூா்து அன்னை தோ் பவனி நடைபெற்றது.

போப்ஆண்டவா் தெரு, பாத்திமா தெரு உள்ளிட்ட தெருக்கள் வழியாக தோ் பவனி வந்தது. ஏராளமான கிருஸ்துவா்கள் பக்தி மாலை பாடியபடி உடன் வந்தனா். மேலும், புனித அந்தோணியாா் தோ் பவனியும் நடைபெற்றது.

வேலூா் மறைமாவட்டத்தைச் சோ்ந்த அம்புரோஸ் பிச்சைமுத்து சிறப்பு திருப்பலி நடத்தி தோ் பவனியில் பங்கேற்றாா். சேத்துப்பட்டு லூா்து நகா், நிா்மலா நகா், தச்சம்பாடி, பத்தியாவரம், தேவிகாபுரம் உள்பட பல்வேறு பகுதியிலிருந்து திரளான கிறிஸ்துவா்கள் கலந்துகொண்டனா்.