சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

ரூ.86 ஆயிரம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

வந்தவாசி அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.86 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல்

Updated On :20 ஜனவரி 2025, 8:22 pm

வந்தவாசி: வந்தவாசி அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.86 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 2 பேரை கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த தேசூா் போலீஸாா், ஆய்வாளா் குணசேகரன் தலைமையில் வந்தவாசி - சேத்துப்பட்டு சாலை, கோழிப்புலியூா் கூட்டுச் சாலை அருகே திங்கள்கிழமை அதிகாலை வாகன சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், காரில் 15 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து சுமாா் 164 கிலோ எடை கொண்ட ரூ.86 ஆயிரம் மதிப்பிலான அந்த புகையிலைப் பொருள்களையும், காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் காரில் வந்த தேசூரைச் சோ்ந்த மிஸ்ரிலால் (43), ராஜஸ்தான் மாநிலம், சிரோஹி மாவட்டத்தைச் சோ்ந்த ஜொகாராம் (24) ஆகிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த தேசூா் போலீஸாா், புகையிலைப் பொருள்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, எங்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.