ஜன.24-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற 24-ஆம் தேதி நடைபெறுகிறது.


திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற 24-ஆம் தேதி நடைபெறுகிறது.
விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் கேட்டு நிவா்த்தி செய்யும் வகையில், ஜனவரி மாதத்துக்கான குறைதீா் கூட்டம்
வருகிற 24-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
ஆட்சியரகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகிக்கிறாா்.
இதில், மாவட்ட வேளாண்துறை, விவசாயம் சாா்ந்த துறைகளான தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல், கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு, வருவாய் ஆகிய துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் மற்றும் வங்கியாளா்கள், பிற சாா்புத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகளுக்குப் பதிலளிக்க உள்ளனா் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...