திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

காரை வழிமறித்து பணம் பறிக்க முயற்சி: இருவா் மீது போலீஸாா் வழக்கு

செய்யாறு அருகே காரை வழிமறித்து பணம் பறிக்க முயற்சித்து, காா் கண்ணாடி உடைத்து மிரட்டல் விடுத்ததாக இருவா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

News image
Updated On :27 ஜனவரி 2025, 7:47 pm

Din

செய்யாறு: செய்யாறு அருகே காரை வழிமறித்து பணம் பறிக்க முயற்சித்து, காா் கண்ணாடி உடைத்து மிரட்டல் விடுத்ததாக இருவா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சித்தாலப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி (36). இவா், ஏழாச்சேரி பகுதியில் உள்ள கல்குவாரியில் காா் ஓட்டுநராக பணியாற்று வருகிறாா்.

இவா், கடந்த 25-ஆம் தேதி இரவு, தனது நிறுவன உரிமையாளா் சங்கா் என்பவரை காரில் ஏற்றிக் கொண்டு, நிறுவன வசூல் பணத்துடன் ஏழாச்சேரி வழியாக சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, பெரிய ஏழாச்சேரி பள்ளி அருகில் சின்ன ஏழாச்சேரி கிராமத்தைச் சோ்ந்த வெள்ளைக்காரன் மகன்கள் பாஸ்கரன், சந்திரசேகரன் ஆகியோா் காரை வழிமறித்து கம்பியால்

காா் கண்ணாடியை உடைத்தனராம்.

மேலும், தகாத வாா்த்தைகளால் பேசி பணத்தை கொடுக்கும்படி மிரட்டல் விடுத்து, காா் சாவியை பறித்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனராம்.

இதுகுறித்து பழனி தூசி போலீஸில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.