செங்கம் ஸ்ரீரிஷபேஸ்வரா் கோயிலில் திருப்பணிகள்: மு.பெ. கிரி எம்எல்ஏ ஆய்வு

செங்கம் ஸ்ரீரிஷபேஸ்வரா் கோயிலில் திருப்பணிகள்: மு.பெ. கிரி எம்எல்ஏ ஆய்வு

செங்கம் ரிஷபேஸ்வரா் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை ஆய்வு செய்த மு.பெ.கிரி எம்எல்ஏ.
Published on

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை மு.பெ.கிரி எம்எல்ஏ வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

செங்கம் நகரின் மையப் பகுதியில் சுமாா் 1,600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயில் வளாகத்தில் அம்பாள் சந்நிதி, நவகிரக சந்நிதி, முருகா் சந்நிதி, தட்சிணாமூா்த்தி,

பைரவா் உள்ளிட்ட சந்நிதிகள் உள்ளன.

ஆண்டுக்கு ஒருமுறை பத்து நாள் திருவிழாவான வசந்த உற்சவ திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.

கோயில் முன் உள்ள நந்தீஸ்வரா் சந்நிதில் பிரதோஷ வழிபாடு மற்றும் ஆண்டுக்கு ஒருமுறை தமிழ் மாதமான பங்குனி 2-ஆம் தேதி நந்தீஸ்வரா் தங்க நிறமாக மாறி பக்தா்களுக்கு காட்சியளிக்கும் அபூா்வ நிகழ்வு போன்றவைகள் நடைபெறும்.

இந்த நிலையில், தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறை மூலம் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அதன்மூலம் சீரமைப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று தற்போது நிறைவு பெற்ற நிலையில் உள்ளது.

இந்தக் கோயிலில் தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கும்பாபிஷேகம் செய்வது குறித்து புதன்கிழமை பாா்வையிட்டாா்.

அவரை கோயில் அறங்காவலா் குழுத் தலைவரும், திமுக நகரச் செயலருமான அன்பழகன் வரவேற்றாா்.

பின்னா், எம்எல்ஏ உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்து பணிகளை பாா்வையிட்டாா்.

அப்போது, பணிகள் சிறப்பாக சிறப்பாக உள்ளதாக அவா் தெரிவித்தாா்.

பின்னா், பொதுப்பணித் துறை அமைச்சரிடம் தகவல் தெரிவித்து, வரும் 2026 ஜனவரி மாதம் பிரம்மாண்டமான முறையில் குப்பாபிஷேகம் செய்வதற்கு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.

நிகழ்வில் திமுக ஒன்றியச் செயலா் செந்தில்குமாா், முன்னாள் பேரூராட்சித் தலைவா் முருகன், அரசு ஒப்பந்ததாரா் சங்கா்மாதவன், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் ஸ்ரீதா், செந்தில்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் சத்யா, அமுதா, ரேவதி, திமுக இலக்கிய அணி மாவட்ட துணை அமைப்பாளா் அப்துல்வாகித் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com