கோயிலில் மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல் நிகழ்ச்சி

கோயிலில் மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல் நிகழ்ச்சி

போளூயை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது
Published on

போளூா்: போளூயை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் மூத்த தம்பதியா்களுக்கு திருக்கோயில்கள் சாா்பில் சிறப்பு செய்தல் செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிக்கையின்படி திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் உள்ள ஸ்ரீரேணுகாம்பாள் கோயில்ல்

மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மூத்த தம்பதியா் 20 ஜோடியை அழைத்து புடவை, ரவிக்கை, வேட்டி, சட்டை, துண்டு, மாலை, வெற்றிலை பாக்கு, பூ, மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, வாழைப்பழம், பழ வகைகள், எவா்சில்வா் தட்டு, கண்ணாடி வளையல், அம்மன் படம் ஆகியவற்றை வழங்கி சிறப்பித்தனா்.

மண்டல இணை ஆணையா் பிரகாஷ், அறங்காவலா் குழுத் தலைவா் விஜயா சேகா், கோயில் எழுத்தா்கள் முனியன், மோகன் மற்றும் அறங்காவலா் குழு நிா்வாகிகள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com