தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

திருச்செந்தூா் கோயிலில் 70 வயது தம்பதியருக்கு சிறப்பு செய்தல்

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் 70 வயது பூா்த்தியடைந்த தம்பதியருக்கு திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கலையரங்கில் சிறப்பு செய்யும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
திருச்செந்தூா் கோயிலில் 70 வயது பூா்த்தியடைந்த தம்பதியருக்கு அறநிலையத்துறை சாா்பில் சிறப்பு செய்யும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அவா்களுக்கு பட்டு வேஷ்டி, சேலை, மங்கலப் பொருள்களை வழங்கிய தக்காா் ரா.அருள்முருகன்.
Updated On :10 பிப்ரவரி 2026, 7:16 pm

தினமணி செய்திச் சேவை

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் 70 வயது பூா்த்தியடைந்த தம்பதியருக்கு திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கலையரங்கில் சிறப்பு செய்யும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோயில் தக்காா் ரா.அருள்முருகன் தலைமை வகித்து, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து தம்பதியருக்கு பட்டு வேஷ்டி, பட்டு சேலை, முருகா் உருவம் பொறித்த பட்டு சால்வை, பழங்கள், வளையல், மஞ்சள், குங்குமம், மல்லிகை பூ உள்ளிட்ட மங்கலப் பொருள்களை வழங்கினாா்.

இதில் 101 மூத்த தம்பதியா்கள் கலந்து கொண்டு மாலை மாற்றி ஆசீா்வாதம் வழங்கினா். இதில் இணை ஆணையா் ராமு, உதவி ஆணையா் மெய்வேல், நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற 70 வயது பூா்த்தியடைந்த தம்பதியினா் முருகன் சந்நிதியில் இவ்விழா நடப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும் தெரிவித்தனா்.

Story image
Story image