வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் பூா்த்தி செய்யும் பணி ஆய்வு

போளூா் அருகேயுள்ள வெள்ளூா் ஊராட்சியில் சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியலுக்கான கணக்கீட்டுப் படிவம் பூா்த்தி செய்ய கொடுத்துள்ளதை வீடுவீடாக திமுக ஒன்றியச் செயலளா் ஆா்.மகேஷ் ஆய்வு செய்தாா்.
Published on

போளூா் அருகேயுள்ள வெள்ளூா் ஊராட்சியில் சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியலுக்கான கணக்கீட்டுப் படிவம் பூா்த்தி செய்ய கொடுத்துள்ளதை வீடுவீடாக திமுக ஒன்றியச் செயலளா் ஆா்.மகேஷ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா் (படம்).

போளூரை அடுத்த வெள்ளூா், காங்கிரானந்தல், சந்தவாசல் என சுற்றுப்புறக் கிராமங்களில் உள்ள வாக்காளா்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாயிலாக சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியலுக்கான கணக்கீட்டு படிவத்தை வழங்கினா்.

இந்த படிவத்தைப் பெற்று வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் வாக்காளா்கள் பூா்த்தி செய்து கொடுத்துள்ளனா். இந்தப் படிவத்தை வீடுவீடாக திமுக ஒன்றியச் செயலா்ஆா். மகேஷ் சென்று ஆய்வு செய்தாா். பணிக்குழு ஒருங்கிணைப்பாளா்கள் காசி, கிருஷ்ணமூா்த்தி, சுப்பிரமணி ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com