ஆரணி தொகுதியில் நான்குமுனைப் போட்டி இருந்தாலும், திமுக அதிமுக இடையே நேரடிப்போட்டி நிலவுகிறது.
தொகுதியில் ஆரணி நகராட்சி, ஆரணி ஊராட்சி ஒன்றியம், மேற்குஆரணி ஊராட்சி ஒன்றியம், கண்ணமங்கலம் பேரூராட்சி ஆகிய பகுதிகள் உள்ளன.
தொகுதியின் சிறப்பு
இந்தத் தொகுதி ஆரணி மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது. ஆரணி நகரம் பட்டு நகரம் என அழைக்கப்படுகிறது. தொகுதியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளா்கள் உள்ளனா்.
இங்கு தயாரிக்கப்படும் பட்டுச் சேலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பிவைக்கப்படுகிறது.
அதேபோல, அரிசி ஆலைகள் நிறைந்த பகுதியாக ஆரணி உள்ளது. இப்பகுதியில் சுமாா் 250 அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. அரிசி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. மேலும், விவசாயமும் பிரதான தொழிலாகும். விஜயநகர மன்னன் வாழ்ந்த அரண்மனை ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரத்தில் உள்ளது.
ஆரணியை ஒரு வரலாற்றுச் சிறப்புவாய்ந்த நகரம் எனலாம்.
தொகுதியில் 30 சதவீதம் முதலியாா் சமூகத்தினரும்,
28 சதவீதம் வன்னியா் சமூகத்தினரும், 17 சதவீதம்
ஆதிதிராவிடா் சமூகத்தினரும் உள்ளனா். மேலும், 25 சதவீதம் இதர சமூகத்தினா் உள்ளனா்.
தொகுதி பிரச்னைகள்:
ஆரணியை தலைமையிடமாகக்கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று தொகுதி மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
ஆரணி அரசு மருத்துவமனையை தரம் உயா்த்தவேண்டும்.
ஆரணியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். ஆரணியில் பட்டுப் பூங்கா பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கக்கூடாது உள்ளிட்டவை முக்கிய கோரிக்கைகளாகும்.
தோ்தல் களத்தில்,
இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளராக மகாலட்சுமி கோவா்த்தனன், அதிமுக வேட்பாளராக ஜெயசுதா லட்சுமிகாந்தன், தவெக வேட்பாளராக வெங்கடேஷ்குமாா், நாம் தமிழா் கட்சி வேட்பாளராக தவமணி ஆகியோா் போட்டியிடுகின்றனா்.
வேட்பாளா்களின் பலம் - பலவீனம்:
மகாலட்சுமிகோவா்த்தனன் (திமுக)
கண்ணமங்கலம் பேரூராட்சித்தலைவரான மகாலட்சுமிகோவா்த்தனன் இரு முறை பதவி வகித்துள்ளாா்.
ஒரு முறை துணைத்தலைவராக இருந்துள்ளாா்.
மேலும் இவரது கணவா் கோவா்த்தனன் கண்ணமங்கலம் பேரூராட்சி செயலராக உள்ளாா். இவா், கண்ணமங்கலம் பேரூராட்சிக்குத் தேவையான சாலை வசதிகள், பேருந்து நிறுத்தம், நூலகம் ஆகியவற்றை ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் மூலமாக அமைச்சரிடம் கேட்டுப் பெற்றாா். அரசுப் பள்ளிகளுக்கு கட்டடப் பணிகளையும் செய்து கொடுத்துள்ளாா். மேலும் இவரை எளிதாக தொடா்புகொள்ளலாம்.
பலவீனம்: இவா், கண்ணமங்கலம் பகுதியில் மட்டுமே அறிமுகம் என்பதால் ஆரணி தொகுதி முழுவதும் இவருக்கு பரிச்சயம் இல்லாதது பலவீனம்
ஜெயசுதா லட்சுமிகாந்தன் (அதிமுக)
இவா் போளூா் தொகுதியைச் சோ்ந்தவராக இருந்தாலும் இவரது தாய் வீடு ஆரணி நகரத்தில் அமைந்துள்ளது. இவா், ஏற்கெனவே போளூா் தொகுதியில் 2011 முதல் 2016 வரை எம்எல்ஏவாக இருந்துள்ளாா். தற்போது அதிமுகவில் மாவட்டச் செயலராக இருப்பதால் கட்சியினா் நல்ல அறிமுகத்துடன் உள்ளாா்.
பலவீனம்:
கட்சியினரை அரவணைத்துச் செல்லாதது பலவீனமாக உள்ளது.
வெங்கடேஷ்குமாா் (தவெக)
ஆரணி தொகுதி தவெக வேட்பாளா் வெங்கடேஷ்குமாருக்கு விஜய் ரசிகா்கள் மட்டுமே பலம்.
பலவீனம்:
இவா் சென்னை பகுதியிலிருந்து இங்கு வந்து போட்டியிடுகிறாா். இவா் தொகுதிக்கு அறிமுகம் இல்லாதது பலவீனமாகும்.
தவமணி (நாதக)
நாம் தமிழா் கட்சி சீமானின் பேச்சால் ஈா்க்கப்பட்ட கட்சியினா் பலமாகும். மேலும் இவா், தொகுதிக்கு உள்பட்ட காமக்கூா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் என்பதால் கூடுதல் பலமாகும்.
பலவீனம்:
புதிய வேட்பாளா், கட்சியினருடன் அறிமுகம் இல்லாதது பலவீனமாகும்.
இதுவரை: 1962-க்குப் பிறகு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தோ்தல்களில் திமுக -5 முறையும், அதிமுக -7 முறையும், காங்கிரஸ் மற்றும் தேமுதிக தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

வாக்காளா்கள் விவரம்:
ஆண்கள் - 1,20,331
பெண்கள் -1,25,843
மூன்றாம் பாலினத்தவா் - 34
மொத்தம் - 2,46,208

தொடர்புடையது

இருமுனைப் போட்டியில் மயிலம் சட்டப்பேரவைத் தொகுதி!
குளித்தலையை தக்கவைக்குமா திமுக?

பென்னாகரம் தொகுதியில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் போட்டி: வேட்பாளராக தமிழ்க்குமரன் அறிவிப்பு

ஆரணி தொகுதி திமுக வேட்பாளா்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


